வன்முறை மோதலின் போது சீன ராணுவத்தினர்கள் எத்தனை பேர் மரணம்...?அமெரிக்க உளவுத்துறை தகவல்

கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து இதுவரை சீன அரசு, சீன ராணுவம், சீன ஊடகங்கள் எதுவுமே அதிகாரபூர்வமாக கருத்து வெளியிடவில்லை. சேதம் இரண்டு பக்கமும் நிகழ்ந்துள்ளது என்றுதான் சீனா அறிவித்துள்ளது.


இது திட்டமிட்ட தாக்குதல் என்று இந்தியா இதனை இன்று வெளிப்படுத்தியுள்ளது. 20 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்றும் இன்னமும் மூன்று பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உயிரிழப்பு குறித்து நமது அரசும், ராணுவமும் உறுதியான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது சீன ராணுவத்தினர் 35 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை.

இந்த நேரத்தில் ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரியவந்துள்ளது. அதாவது திட்டமிட்டு இந்த வன்முறை தூண்டப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த பிரச்னை ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் முடிவில் சீனா இருப்பதும் தெரியவந்துள்ளது. 

கொரோனாவுடன் இன்னமும் போராட முடியாமல் தவித்துவரும் வேளையில், சீன விவகாரம் இந்தியாவில் பெரும் டென்ஷனைக் கிளப்பியுள்ளது.