மெட்ராஸ் எப்படி சென்னையாக மாறியது தெரியுமா! மெட்ராஸ் டே ஸ்பெஷல்!

பல வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டின் தலைநகரான மெட்ராஸ் எவ்வாறு சென்னை ஆக மாறியது என்பதை இனி நாம் காண்போம் .


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பல வருடங்களுக்கு முன்னால் மதராஸ்  மற்றும் சென்னை என்ற இரு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது .

மதராஸ் என்ற பெயரை பிறமொழிகளில் மெட்ராஸ் என்று எழுதி வந்தார்கள் . தமிழ்நாட்டின் தலைநகரை அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக கூற வேண்டும் என்ற முடிவெடுத்து அன்று முதல்வராக இருந்த கலைஞர் மு கருணாநிதி மதராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை என்று  அறிவித்தார் .

இந்தப் பெயர் மாற்றம் 17 -7-1996 ஆம் ஆண்டு  சட்டப் பேரவையில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

சென்னை என்ற பெயர் வந்ததற்கு வரலாற்று அடிப்படையில் இரண்டு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது . தற்போது சென்னையில் உள்ள ஐகோர்ட் பகுதியில் சுமார் 350 வருடங்களுக்கு முன்னால் சென்னகேசவர் ஆலயம் இருந்திருக்கிறது . இது நாளடைவில் சென்னை என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது .

ஆங்கிலேயர்கள் கட்டியை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு இடமளித்த ஐயப்ப  நாயக்கர் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரால் இந்த பகுதி சென்னை பட்டினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது .