எவ்வளவு நாள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும்?

தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போகும் என்ற தவறான எண்ணம் இன்னமும் சில பெண்கள் மனதில் இருக்கத்தான் செய்கிறது. இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதற்கு கூச்சப்படவும் செய்கிறார்கள். தாய்ப்பால் எதுவரை கொடுக்க வேண்டும்?


·         முதல் ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது, தண்ணீர்கூட தேவையில்லை.

·         ஆறு மாதங்களில் இருந்து இரண்டு வருடம் வரையிலும் இணை உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

·         ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு பிற உணவுகள் தேவை என்றாலும் புரதம், வைட்டமின் ஏ, இரும்புச்சத்து கிடைப்பதற்கு தாய்பாலே சிறந்தது.

·         ஆறு வயதில் இருந்து ஒரு வயது வரையிலும் பிற உணவுகள் தருவதற்கு முன்பு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.

இரண்டு வருடம் வரையிலும் தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகள் மிகவும் பாதுகாப்பாக உணர்வை பெறுகின்றனவாம். மேலும் இந்தக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் போதுமான அளவு கிடைக்கிறது.