விநாயகசதுர்த்தி தமிழ்நாட்டில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி உலகம் முழுவதும் இந்திரவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது .


தமிழர்களின் முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயகரின் சதுர்த்தி விழா தமிழ்நாட்டில் தமிழர்களால் எவ்வாறு கொண்டாடப்படுகிறது பற்றி இனி நாம் காண்போம். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே பல்வேறு வகையினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் முக்கிய பகுதிகளில் வைக்கப்படும் . எந்தப் பொருளினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை நம் பகுதியில் வைக்கப்பட உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் மக்கள் ஆவலாக காத்திருப்பார்கள்.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட உடன் விநாயகருக்கு பல்வேறு விதமான பூஜைகள் செய்யப்பட்டு அவர் பக்தர்களுக்கு அருள் வழங்குவார். 

பக்தர்கள் வீடுகளுக்கு விநாயகர் சிலை மற்றும் குடை ,தோரணம், எருக்கம்பூ மாலை , அறுகம்புல் , அவல் பொரி மோதகம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபடுவர் . விநாயகர் சதுர்த்தி முடிந்து சில நாட்களுக்குப் பின்பே விநாயகர் சிலைகள் அப்பகுதிக்கு அருகில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் அல்லது கடற்கரையில் கரைக்கப்படும். இவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் .