உங்க ராசியை சொல்லுங்க! போன பிறவியில் நீங்க எப்படி பிறந்திருப்பீங்கன்னு சொல்றோம்!

ஜோதிடத்தின் மூலம் எதிர்காலத்தை மட்டுமே கணிக்க முடியும் என்று கிடையாது ஜோதிடத்தின் மூலம் கடந்த காலத்தில் குறிப்பிட்ட நபருடைய வாழ்க்கையையும் கணித்து சொல்ல முடியும்


அப்படி உங்கள் ராசிப்படி போன ஜென்மத்தில் எப்படி இறந்திருப்பீர்கள் என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம்: நீங்கள் நிச்சயம் வீரமும் துணிச்சலும் நிறைந்தவர்களாக இருப்பீர்கள். எவ்வளவு பெரிய சவால் விட்டாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று அஞ்சாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவராக இருப்பீர்கள்.

சூரியன் தான் உங்களின் அதிபதி என்பதால் நீங்கள் நெருப்பைப் போன்று மனோதிடமும் வீரமும் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு முன் ஜென்ம மரணம் என்பது உங்களுடைய நண்பர்கள் மூலம் நீங்கள் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பீர்கள். உங்களுடைய ரகசியங்கள் தெரிந்தவர்களால். அதனால் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களை தவிர மற்ற யாரிடமும் நீங்கள் உங்களுடைய சொந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்வதை தவிருங்கள். 

ரிஷபம்: பூமியின் முக்கிய குறியீடு நீங்கள். உங்களுடைய குறிக்கோளில் உறுதியாக நிற்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். நீங்கள் ஒரு அன்பான கூட்டத்துக்கு இடையே நீங்கள் வாழ்வீர்கள். ஏராளமான நண்பர்களை பெற்று இருப்பீர்கள். உங்களிடம் ஏராளமானோர் நேருக்கு நேராக வந்து அன்பை, தங்களுடைய காதலை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

உங்களுடைய முன் ஜென்ம மரணம் என்பது நீண்ட ஆயுளுடன் நீங்கள் மகிழ்வாக வாழ்க்கையை வாழ்ந்து நிறைவு செய்த பின்னரே நிகழ்ந்திருக்கும். வயது முதிர்ந்த பின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து இருப்பீர்கள். அதனால் இந்த ஜென்மத்திலும் அவ்வப்பொழுது மருத்துவரிடம் சென்று உங்களுடைய உடல்நிலையை பரிசோதனை செய்து கொண்டு நீண்ட ஆயுளுடன் வாழுங்கள்.  

மிதுனம்: நீங்கள் மிகவும் அன்பானவர். பிறரிடம் உண்மையாக முழுமனதுடன் பாசத்தை வெளிப்படுத்துவீர்கள்.  எப்போதும் கல கலவென இருக்க ஆசைப் படுபவராக இருப்பீர்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவராக இருப்பீர்கள். நீங்கள் மக்கள் நாயகனாக அதாவது பிறர் விரும்பும் ஆளாக இருப்பீர்கள். எங்கு செல்கிறீர்களோ அங்கெல்லாம் நண்பர்களை உருவாக்குவீர்கள்.

நீங்கள் கொஞ்சம் வித்தியாசமான முறையில் இறந்திருப்பீர்கள். அதாவது மிக உயரமான இடத்திலிருந்து கீழே குதித்து இறந்து போய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை நீங்கள் தவறியும் விழுந்து இருக்கலாம் அல்லது வேறு யாராவது உங்களை பிடித்து பின்னாலிருந்து தள்ளி விட்டு இருக்கலாம். அதனால் இந்த ஜென்மத்தில் உயரமான இடங்கள், உயரமான கட்டிடங்கள், மலைகள் போன்றவற்றில் நிதானமாக இருப்பது நல்லது. அதே சமயம் மெதுவாக செல்ல பழகுங்கள்  

கடகம்:  இந்த ராசிக்காரர்கள் எந்த இடத்திலும் தங்களை தகவமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். எப்படிப்பட்டவர்களையும் அனுசரித்து அரவணைத்து செல்லும் குணம் கொண்டவராக இருப்பார்கள். தண்ணீரைப் போல எல்லா இடத்திலும் மிக எளிதாக அந்த இடத்துக்கு ஏற்ப பரவக்கூடியவராக இருப்பார்கள். உங்களிடம் உணர்வுகள், காதல், படைப்புத்திறன் ஆகியவற்றுக்கு பஞ்சமே இருக்காது.

உங்களுடைய நேர்மையாலும், பிறரின் மீது கொண்டுள்ள அக்கறையாலும் எல்லோராலும் விரும்பப்படுகிற ஆளாக இருப்பீர்கள். முன் ஜென்மத்தில் நீங்கள் தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருப்பீர்கள். அதனால் இப்போதும் நீச்சல் தொட்டி, பெரிய தண்ணீர்த் தொட்டி ஆகியவற்றை குனிந்து உற்றுப் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். கடற்கரையில் விளையாடும் போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். 

சிம்மம்: சிம்மம் என்பது சிங்கத்தின் குறியீடு. சிம்மராசி நெருப்பின் அடையாளம். சிம்ம ராசிக்காரர்கள் மனது முழுக்க தீவிரமான குறிக்கோள்களும் பெரும் ஆசைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். மனவுறுதி கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் வெற்றிக்கு அவர்களே காரணமாக இருப்பார்கள். முன்ஜென்மத்தில் பெரும்பாலும் இவர்கள் மற்றவர்களால் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வேலை, தொழிலில் உடனிருப்பவர்கள் மூலமாகவே நடந்திருக்கும். மனதில் பட்டதை அப்படியே பேசினாலும் இவர்கள் வார்த்தைகளால் பிறருடைய மனம் புண்பட வாய்ப்பு இருப்பதால் அந்த பண்பை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 

கன்னி: இந்த ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். அதிகம் பேசமாட்டார்கள். சின்னச் சின்ன விஷயங்களையும் கூட மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருப்பார்கள். நேர்மையும் கடின உழைப்பும் இவர்களுக்கான அடையாளமாக இருக்கும். இவர்கள் அன்புக்காகவும் லட்சியத்துக்காக போராடும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.

முன்ஜென்மத்தில் இவர்கள் பெரும்பாலும் விபத்துகளில் இறந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் சாலைகளில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களில் வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். 

துலாம்: இவர்கள் எப்போதும் சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கக்கூடியவர்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். யாரையாவது பாராட்டுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் யோசிக்கவே மாட்டார்கள். எதையும் தங்களுடைய வழியிலேயே அணுகுவார்கள். வன்முறைக்கும் அசௌகரியமான சூழலுக்கும் ஒருபோதும் ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.

முன் ஜென்மத்தில் உடல்நல கோளாறினால் இறந்திருப்பார்கள். அதனால் உடல் ஆரோக்கிய விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்து விடக்கூடாது. அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களைச் சுற்றிலும் எப்போதும் தூய்மையாக வைத்திருங்கள். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.  

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் மிகவும் நட்புடன் பழக கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம் அன்பும் பணிவும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். மற்றவர்களுடைய எண்ண ஓட்டத்தை எளிதில் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப யாருடைய மனதும் புண்படாமல் நடந்துக் கொள்வார்கள்.

விவாதங்களை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். முன் ஜென்மத்தில் இவர்கள் அடையாளம் தெரியாத நபரின் மூலம் கொலையுண்டு இறந்திருக்கக்கூடும். பொதுவாக தெரியாத இடத்துக்கு தனியாக செல்வது இரவு நீண்ட நேரம் வெளியில் சுற்றுவது கூட்டமாக பயணங்கள் மேற்கொள்வது போன்ற சந்தர்ப்பங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

தனுசு:  இவர்கள் தியாக உணர்வு கொண்டவர்களாகவும் நகைச்சுவை உணர்வு உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களுடைய போக்கிலேயே தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர்களாக இருப்பார்கள். யாராவது உங்களை கட்டுப்படுத்த நினைத்தால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. உங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள போராடுவீர்கள்.

முன் ஜென்மத்தில் நீங்கள் தற்கொலை செய்து இறந்திருப்பீர்கள். அதனால் மன அழுத்தம், கோபம் போன்றவற்றை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். 

மகரம்: மகர ராசிக்காரர்கள் பொறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். நல்ல குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இயற்கையையும் அமைதியையும் விரும்புவர்களாக இருப்பார்கள்.

சுய கட்டுப்பாடு மிக்க ஆளாக இருப்பார்கள். முன் ஜென்மத்தில் நீங்கள் கொலை செய்யப்பட்டு இறந்திருப்பீர்கள் அல்லது கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டு இறந்திருப்பீர்கள். சொந்த வாழ்க்கை பற்றிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். 

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் பிறக்கும்போதே கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்சம் அமைதியான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதோடு இவர்கள் நடுநிலை ஆனவர்களாகவும், சுறுசுறுப்பான ஆட்களாகவும் இருப்பார்கள். எதையும் ஆழ்ந்து யோசிப்பவர்களாக இருப்பார்கள்.

அறிவு மிக்கவர்களாகவும், அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். முன்ஜென்மத்தில் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தின் மூலம் இறந்திருப்பீர்கள். அதனால் சமைக்கும்போதும் எலெக்ட்ரிக்கல் பொருட்களை கையாளும் போதும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். 

மீனம்: மீன ராசிக்காரர்கள் மிகவும் நட்பு ரீதியாக மற்றவர்களிடம் நடந்து கொள்வார்கள். எல்லா வகையான ஆட்களுடன் சமாளித்து செல்லும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுயநலம் இல்லாதவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருப்பவர்கள் எந்த காரியத்திலும் பின்வாங்க மாட்டார்கள்.

முன்ஜென்மத்தில் வயது முதிர்ந்த பின்பு உண்டான கடுமையான சளி மற்றும் காய்ச்சல் காரணமாக இறந்து போயிருப்பீர்கள். அதனால் உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.