உலகமெங்கும் தீபாவளி பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா ?

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக உள்ளது.


தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகை ஆக கொண்டாடப்படும் தீபாவளி உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்களால் வித்தியாசமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியாவில் ஹரி தீபாவளி என்ற பெயரில் தீபாவளி பண்டிகை ஆனது கொண்டாடப்பட்டு வருகிறது அன்றையதினம் மலேசியாவில் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகையில் வெகு விமர்சையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அமெரிக்காவில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் தீபாவளித் திருநாள் ஆனது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பகுதிகளில் தீபாவளி திருநாள் , இந்து வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை ஆனது நரகாசுரனை வதம் செய்த திருநாளாக கொண்டாடப்படுகிறது.