என்ன வேலைய விட்டு தூக்க போறாங்க..! என் உடம்ப தானமா எடுத்துக்கோங்க..! கடிதம் எழுதிவிட்டு பெண் ஐடி என்ஜினியர் எடுத்த பகீர் முடிவு!

பணிநீக்க பட்டியலில் பெயர் இடம்பெற்றதால் மனமுடைந்த பெண் மென்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் ராய்துர்கம் பகுதியில் இயங்கி கொண்டிருந்த ஐ.டி. கம்பெனியில் கடந்த 2 வருடங்களாக ஹரிணி என்ற இளம்பெண் பணியாற்றி வந்தார். இதனிடையே அந்த நிறுவனம் ஹரிணியை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இதனால் பெரிதும் மனமுடைந்து போன ஹரிணி தன்னுடைய விடுதி அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தற்கொலைக்குப் முன்னர், அவர் தன்னுடைய உடல் பாகங்களை தானம் அளிக்க வேண்டுமென்று ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். ஹரிணி தற்கொலை செய்து கொண்டதை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.