நடுரோட்டில் மனைவியிடம் வரம்பு மீறிய இளைஞன்! நேரில் பார்த்த கணவன்! பிறகு அரங்கேறிய தரமான சம்பவம்!

தன் மனைவியிடம் தவறாக நடந்த இளைஞரை மரத்தில் கட்டிவைத்து கணவர் அடித்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் நல்கொண்டா எனும் இடம் அமைந்துள்ளது. இம்மாநிலத்தில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்தப பெண்ணுக்கு திருமணம் ஆனதை தெரிந்தும் இளைஞர் ஒருவர் அடிக்கடி பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார். பலமுறை தடுத்து பார்த்தும் அந்த பெண்ணால்  இயலவில்லை. 

உடனடியாக அந்த பெண் தன் கணவரிடம் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை கூறியுள்ளார். ஒரு நாள் மறைந்து நின்று அந்த இளைஞன் தன் மனைவியை சீண்டுவதை பார்த்துள்ளார். 

ஆவேசமடைந்த கணவர் அந்த இளைஞனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். பின்னர் அந்த இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார். அதன் ஷுவை மனைவியிடம் கொடுத்து அந்த இளைஞனை அடிக்குமாறு கூறியுள்ளார்.

அந்த இளைஞனை தன் மனைவி ஷுவால் அடைக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.