போலீஸ்னா என்ன பெரிய..? நடுரோட்டில் கெத்து காட்டிய வழக்கறிஞருக்கு பிறகு நேர்ந்த பரிதாபம்!

போக்குவரத்து காவலரை வழக்கறிஞர் ஒருவர் தாக்க முயன்ற சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு பின்புறத்தில் ஜி.என்.செட்டி சாலை அமைந்துள்ளது. இங்கு போக்குவரத்து காவலரான சேகர் என்பவர் வாகன சோதனையில் வழக்கம் போன்று ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மது அருந்திவிட்டு போதையில் தன் மனைவியுடன் நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவரை சேகர் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தான் வழக்கறிஞர் என்று கூறி தரைகுறைவாக பேச தொடங்கினார்.

மேலும் காவல்துறை அதிகாரிகளை அந்த வழக்கறிஞர் தாக்கவும் முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவமானது பாண்டி பஜார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது அந்த வழக்கறிஞரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.