ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுவன் சுர்ஜித் உயிரிழந்தது எப்படி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றுக்குள் விழந்த சுர்ஜித் உடல் சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


ஐந்து நாட்களாக சிறுவன் சுர்ஜித்தை மீட்க நடைபெற்று வந்த முயற்சி நேற்று இரவு 10.30 மணி அளவில் நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்துள்ளது. முதலில் இதனை பொருட்படுத்தாத அதிகாரிகள் பிறகு தங்கள் பணிகளை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் மிகவும் மோசமான அளவில் துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சென்று ஆய்வை மேற்கொண்டனர். அப்போது வரக்கூடிய துர்நாற்றம் மனித உடல் இறந்த பிறகு ஏற்படக்கூடியது என்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.

இதனை  அடுத்து உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதன் பிறகு சிறுவன் சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது. உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

அங்கு பரிசோதனையில் குழந்தை மூச்சுவிட முடியாமல் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. குழந்தையின் கைகள் மேலே இருந்த நிலையில் முகம் கீழே இருந்துள்ளது. இதனால் ஆக்சிஜனை உள்ளே செலுத்தியும் மூச்சுவிட முடியாமல் சுர்ஜித் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.