சென்னையில் முக்கியமானதாக கருதப்படும் வரிசையில் மேம்பாலங்களும் ஒன்று அத்தகைய மேம்பாலங்கள் முக்கியமானது என்று கருதப்படுவது கத்திபாரா மேம்பாலம்.
சென்னையின் முக்கிய இடங்களின் பெயர்கள் எவ்வாறு உருவாகியது தெரியுமா ! மெட்ராஸ் டே ஸ்பெஷல்!

கத்தி பரேட் எனும் வார்த்தையில் இருந்து உருவானது தான் கத்திப்பாரா.
முந்தைய காலத்தில் இந்த இடத்தில் இராணுவத்தினர் கத்திகளையும் துப்பாக்கிகளையும் வைத்து கைது செய்தனர் அதனை மையமாக வைத்து இந்த இடத்திற்கு கத்திப்பாரா என்ற பெயர் வந்தது.
இது மாதிரி சென்னையில் உள்ள பல முக்கிய முக்கிய இடங்களுக்கு அதனுடைய பெயர் காரணங்களை மிக அழகாக எடுத்துரைக்கலாம்.
மயில்கள் அதிகமாக அழகாக ஆடியதால் உருவான இடம் தான் மயிலாப்பூர் தென்னை மரங்கள் அதிகமாக காணப்பட்டதால் உருவான ஊர்தான் தேனாம்பேட்டை.
நுங்கு அதிகமாக விளைந்ததால் இந்த ஊரு நுங்கம்பாக்கம் எனவும் அழைக்கப்பட்டது. குதிரை வண்டிகள் அதிகமாக காணப்பட்ட ஊர் கோடம்பாக்கம். பிரம்பு காடு அதிகமாக காணப்பட்டால் காணப்பட்டதால் அது பெரம்பூர் என அழைக்கப்பட்டது.
இந்த மாதிரி சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பெயர் வருவதற்கான காரணம் அந்த இடத்தில் நடந்த நிகழ்வுகளும் விளைந்த பொருட்களும் என்றே கூறலாம்.