மூச்சு வாங்க வாங்க யூனிபார்முடன் 65கிமீ ஓடிய போலீஸ் அதிகாரி! அதிர்ச்சி காரணம்!

65 கிலோமீட்டர் ஓடப்போவதாக அறிவித்த காவல்துறை அதிகாரி நடு வழியிலேயே மயங்கி விழுந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் எட்டாவா என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் விஜய் பிரதாப் என்பவர் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் நேர்மையாக பணியாற்றியதன் விளைவாக பல அரசியல்வாதிகளுக்கு எதிரியானார். ஆதலால் இவர் பித்தோலி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இதனை அவர் சற்றும் விரும்பவில்லை. மேலதிகாரிகளிடம் தன் எதிர்ப்பை காட்டுவதற்காகவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் எட்டாவா காவல் நிலையத்திலிருந்து பித்தோலி காவல் நிலையத்திற்கு ஓடி செல்லப்போவதாக அறிவித்திருந்தார். 65 கிலோமீட்டர் தூரத்தில் பாதி அளவை கடந்தபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது பொதுமக்கள் சிலர் அவரை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவமானது உத்திர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.