சர்ஃப் எக்ஸெல் விளம்பரத்தால் அலறும் சங் பரிவாரங்கள்! ஏன் தெரியுமா?

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான, சர்ஃப் எக்ஸெல் சலவைப்பொடி விளம்பரம், பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் நிலையில், ஆர்எஸ்எஸ்சங்-பரிவாரங்கள் எரிச்சல் அடைந்துள்ளன.இந்த விளம்பரத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளன.


மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான, சர்ஃப் எக்ஸெல் சலவைப்பொடி விளம்பரம், பொதுமக்களை வெகுவாக ஈர்த்துவரும் நிலையில், ஆர்எஸ்எஸ்சங்-பரிவாரங்கள் எரிச்சல் அடைந்துள்ளன.இந்த விளம்பரத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளன.

ஹோலிப் பண்டிகை கொண்டாடும் சிறுவர்கள், அவ்வழியாக வெள்ளைக் குர்தா அணிந்து மசூதிக்குத் தொழுகைக்கு செல்லும் முஸ்லிம் சிறுவன் மீதும் வண்ணப்பொடியைத் தூவ முயற்சிக்கிறார் கள். ஆனால், அந்த முஸ்லிம் சிறுவனைக் காப்பாற்றி, தனது சைக்கிளில் மசூதிக்கு அழைத்துச் செல்கிறாள் ஒரு சிறுமி.

அதையும் மீறி ஒருசிறுவன் வண்ணப் பொடி கலந்த பலூனை, தொழுகைக்குச் செல்லும் சிறுவன் மீது அடிக்க முயலும்போது, அந்தச் சிறுவனை மற்றொரு சிறுவன் தடுத்து நிறுத்துகிறான். பின்னர்பாதுகாப்பாக அந்தச் சிறுமி, முஸ்லிம் சிறுவனை மசூதி அருகே விடுகிறாள். சிறுவன் மசூதியின் உள்ளேசென்றவாறே, ‘தொழுதுவிட்டு வருகிறேன்’ என்று சிறுமியிடம் கூறுகிறான்.

பதிலுக்கு அந்தச் சிறுமி, தொழுதுவிட்டு வா.. அப்புறம் உன் மீது வண்ணங்களைத் தெளிக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே கூறுகிறாள்.ஒரு அழகான குறும்படம் போன்று, இந்த விளம்பரத்தை சர்ஃப் எக்சல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 10 நாட்களில் 77 லட்சம் பேர், யூடியூப்பில் இந்த விளம்பரத்தை பார்த்து ரசித்துள்ளனர். 

இதற்குத்தான் சங்-பரிவாரிகள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.சிறுவர் சிறுமியர் மதத்தைக் கடந்து விளையாடுவது போல எப்படி காட்டலாம் என்று கொதித்துள்ள அவர்கள், இந்த விளம்பரத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.