உன் போதைக்கு நான் ஊறுகாயா? கணவனை பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்திய மனைவி! அதிர வைக்கும் காரணம்!

மனைவி ஒருவர் கணவரை எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் செந்தில் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 36. இவருடைய மனைவியின் பெயர் சித்ரா‌.சித்ராவின் வயது 33. இத்தம்பதியினருக்கு ஹரிஷ் என்ற 10 வயது மகனும், வெற்றிவேல் என்ற 12 வயது மகனும் உள்ளனர்.

மகன்கள் இருவரும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இதனிடையே செந்திலுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். 

இதனிடையே குடிப்பதற்காக பணத்தை ஏற்பாடு செய்வதற்கு சித்ராவின் கொலுசை 2,000 ரூபாய்க்கு அடகு கடையில் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தை நன்றாக குடித்துவிட்டு செலவழித்துள்ளார். இந்த விவகாரமானது சித்ராவுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் கணவன் மனைவி இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு ஓய்ந்த பிறகு சித்ரா வெளியில் நின்று கொண்டிருந்த செந்திலின் பைக்கிலிருந்து ஒரு பாட்டில் பெட்ரோலை எடுத்துள்ளார். அதனை வீட்டிற்குள்ளே எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த செந்திலின் மீது ஊற்றி எரித்துள்ளார். 

உடல் முழுவதிலும் தீ பரவிய பிறகு செந்தில் அலற தொடங்கியுள்ளார். அவளுடைய அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்போது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

காவல்துறையினர் தலைமறைவாகி உள்ள சித்ராவை  வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.