பட்டப்பகல்..! பலர் முன்னிலை..! இளம் பெண் கழுத்தில் கத்தியை வைத்து இளைஞர் அரங்கேற்றிய விபரீதம்! ஈரோடு திகுதிகு!

காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் கொலை செய்ய முயற்சித்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் பட்டரமங்கலம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்துவருகிறார். கிராமத்திற்கு அருகே உள்ள சிக்கரசம்பாளையம் கிராமத்திலுள்ள இளம்பெண்ணை சிவகுமார் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் சிவக்குமாரிடம் சில மாதங்கள் நன்றாக பேசியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண் சிவகுமாரை தொடர்ந்து புறக்கணிக்க தொடங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த சிவகுமார் அந்தப் பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று குளத்துப்பிரிவு பேருந்து நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது சிவகுமார் அவரிடம் சென்று தன்னுடன் பழைய வகையில் பழகுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை. உடனடியாக தன்னிடமிருந்த கட்டியை எடுத்து கொலை செய்து விடுவதாக கூறி அந்த பெண்ணை சிவகுமார் பயமுறுத்தியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை அவர் கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது பட்டரமங்கலம் பகுதியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.