கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வந்துவிட்டதை எப்படி கண்டறிய முடியும்?

கர்ப்ப காலத்தில் முறையாக, தொடர்ச்சியாக நீரிழிவு பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். மிகவும் எளிய பரிசோதனையை செய்துகொள்வதன் மூலம் தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் வராமல் தடுக்கமுடியும். ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீரக பரிசோதனை மூலம் நீரிழிவு நோய் கண்டறியப்படலாம்.


·         கர்ப்பம் தரித்த 12வது வாரம், 24வது வாரம், 28வது வாரம் மற்றும் 32வது வாரங்களில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

·         வெறும் வயிற்றில் சர்க்கரை 90 என்ற அளவிலும் சாப்பிட்டபிறகு 120 என்ற அளவிலும் இருப்பது விரும்பத்தக்கது. இந்த அளவில் மாற்றம் கண்டறியப்பட்டால் நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்படும்.

·         பனிக்குடத்தில் அதிக நீர் காணப்படுவதும், சிறுநீரில் புரோட்டீன் அதிகமாக தென்படுவதும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

·         கர்ப்பிணிக்கு சிறுநீர்த் தொற்று ஏற்படுவதும் நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

பொதுவாக கர்ப்பம் அடைந்த 24 முதல் 28 வாரங்களுக்கு இடையில்தான் கர்ப்பகால நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழிவு பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் பிரசவத்திற்கு பின்பு உடல் பருமன், இதய நோய், உயர்ரத்த அழுத்த நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.