மகன் வயது நடிகருடன் படுக்கை அறை காட்சி..! வைரல் புகைப்படத்தின் பின்னணி!

பிரபல நடிகை ஒருவர் மிகவும் இளம் வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்துள்ள வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


1990-களில் தமிழ் சினிமாவில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை தபு. இவர் நடித்த இருவர், சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றி அடைந்தன. இருப்பினும் இவர் பாலிவுட் திரையுலகில் கால்பதித்தார்.

இங்கு பல சினிமாக்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார். தற்போது இவருடைய வயது 48. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், தன்னை முழுவதுமாக சினிமாவுக்கு அர்ப்பணித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் இருந்து சற்று விலகி வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடித்து வெளியான "அ சூட்டபல் பாய்" (A Suitable Boy) வெப் சீரிஸில் 24 வயதான இஷான் கட்டர் என்ற இளைஞருடன் ரொமான்ஸ் செய்வது போன்ற கதைக்களம் அமைந்துள்ளது. இந்த வெப்சீரிஸின் சில எபிசோடுகள் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை பார்த்த ரசிகர்கள் தபு எவ்வாறு தன்னைவிட அரை மடங்கு குறைந்த வயதுடைய இளைஞருடன் கவர்ச்சியாக நடிக்கிறாரே என்று விமர்சித்து வருகின்றனர்.