கல்யாணமாகி 2 வாரத்தில் எப்படி கர்ப்பமாக முடியும்? கணவன் கேட்ட விபரீத கேள்வி! மனைவி செய்த பகீர் செயல்!

மருமகளுக்கு பிறந்த குழந்தை மகனுடையது இல்லை என்று மாமியார் கூறியதால் மருமகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்காசி மாவட்டத்தில் கடையம் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகேயுள்ள கட்டேறிப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி என்ற பெண்ணுடன் பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தொடக்கத்திலேயே முருகனுக்கு இந்தோனேஷியா நாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு சென்றுவிட்டார். மார்ச் மாதத்திலேயே தேன்மொழி கருவுற்றதாக கூறப்படுகிறது. ஆனால் 2 வாரங்கள் மட்டுமே இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் இவ்வாறு தேன்மொழி கருத்தரிக்க முடியும் என்று கூறி முருகனின் வீட்டார் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினர்.

முருகனும் வெளிநாட்டிலிருந்து தன்னுடைய மனைவியிடம் பேசுவதை நிறுத்தி கொண்டுள்ளார். அதன் பின்னர் தேன்மொழி கோவையிலுள்ள உறவினரின் வீட்டில் வசித்து வந்தார். தேன்மொழிக்கு நவம்பர் மாதத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை முருகனின் வீட்டார் கண்டுக்கொள்ளவில்லை. 

40 நாட்கள் கழித்து தேன்மொழி முருகனின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனாலும் அவர்கள் தேன்மொழியை ஏற்று கொள்ளவில்லை. தேனோடு அவர்களின் வீட்டுவாசலில் அமர்ந்துகொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்தால் உண்மை வெளிவரும் என்று தேன்மொழி கூறியுள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தேன்மொழிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவமானது தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.