முகக்கவசத்தால் மூக்கு, வாய்களுக்கு மட்டுமே பாதுகாப்பு..! கண்கள் வழியாக கொரோனா பரவும்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா வைரஸிலிருந்து எந்த அளவிற்கு மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள இயலும் என்று இந்த செய்தி கூறுகிறது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 24,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 5,30,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனிடையே மக்கள் கிருமிநாசினி, முகக்கவசங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தும் போது இந்த நோய் தடுக்கப்பட்டு விடும் என்று அதீத நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் அவ்வாறு அல்ல என்று பிரபல மருத்துவ ஆராய்ச்சியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மாஸ்க் அணிவது பாதுகாப்பை மேம்படுத்தும். ஆனால் வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து கொள்வது போன்ற பயனை, வெளியே செல்லும் போது நம்மால் உணர இயலாது என்றும் கூறப்படுகிறது. இருமல் அல்லது தும்மலின் மூலம் செல்லும் நீர்த்திவலைகள் முகக்கவசங்களுக்குள்ளும் செல்லும் தன்மை உடையனவாக இருக்கும்.

மேலும் மாஸ்க் ஈரமானது போல உணர்ந்ததால் உடனடியாக அவற்றை அகற்றிவிடவேண்டும் என்று அந்த அறிக்கை திட்டவட்டமாக கூறுகிறது. மருத்துவ மாஸ்க்குகளை தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தி விடாதீர்கள் என்றும், பிற மாஸ்க்குகளை துவைத்து பயன்படுத்தும்போது அவற்றின் சக்திகள் குறைந்து விடுகின்றன என்றும் கூறப்படுகிறது.

மாசுகளை முன் பக்கத்திலிருந்து கழற்றி விட கூடாது என்றும், பின்பக்கத்திலிருந்து மட்டும்தான் கழுட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் மாஸ்க்குகளை அணியும்போது சரியாக அணிந்துகொள்ள வேண்டுமென்றும், மீண்டும் மீண்டும் அவற்றை சரி செய்து கொள்வதை தவிர்த்து விடவேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையானது மாஸ்குகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.