லிப்ட் ஸ்விட்ச்களில் எச்சிலை காரி துப்பிய மர்ம இளைஞன்..! சிசிடிவியில் பதிவான அதிர வைக்கும் காட்சி! எங்கு தெரியுமா?

தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் பட்டன்களில் எச்சில் துப்பிய வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் நேர்ந்துள்ள ஒரு நிகழ்வு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாக வெளியாகி வருகிறது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டுக்குள் நுழைந்த ஒரு நபர், தன்னுடைய தளம் வந்தவுடன் லிஃப்ட் பட்டன்களில் எச்சில் தடவுகிறார். அதன் பின்னர் தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார். 


இந்த சம்பவமானது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த குடியிருப்புவாசிகள் பலர் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஊடகத்தில் அந்த குடியிருப்பு வாசியொருவர் பேட்டியளித்ததில், "முதலில் பட்டன்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக எண்ணினேன்.

அதன்பிறகுதான் என்னுடைய குடியிருப்பு லிஃப்டின் வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் வெளியானதை பார்த்தேன். அதே வீடியோவை என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்தார். வீடியோவை முழுவதுமாக பார்த்தவுடன் பேரதிர்ச்சி அடைந்தேன்" என்று கூறினார்.


மேலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமடையும் இந்த நேரத்தில் இது போன்ற செயலில் மனிதாபிமானமற்ற ஒருவர் எவ்வாறு ஈடுபட முடியும் என்று சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியிருப்புவாசிகள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபரை நிர்வாகம் கண்டறிந்து மிகப்பெரிய அபராதத்தை விதிக்க வேண்டும் என்றும் அந்த குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.