குடும்பத்தில் அமைதியும் செல்வமும் நிலைக்க உங்கள் வீட்டு சமயலறை இப்படித்தான் இருக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

வீட்டைப் பொறுத்தவரை சமையல் அறை என்பது ஒரு மிக முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. பழங்காலத்தில், பெரிய சமையல் அறைகளைப் பயன்படுத்துவது ஒரு வரையறையாக இருந்தது.


நல்ல சமையலறையை அமைக்க வேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால், தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள்.  அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.

ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது குடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும்  அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.

அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும். டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலறைக்குப் பக்கத்தில் வரும்படி அமைக்கக்கூடாது.

சமைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தபடி சமைக்கவேண்டும். வீட்டின் வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்றுதான் சமைக்க வேண்டும். அதற்காக அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பை வைக்க வேண்டும்.

‘வாஷ் பேசின் அல்லது ‘சிங்க் வடகிழக்கு மூலையில் வருவதுபோல அமைத்துக்கொள்ளவேண்டும். ‘ஸ்டோரேஜ் ஷெல்ப் அல்லது அலமாரிகள் தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டியவாறு இருக்கவேண்டும். சிறிய அளவிலான ‘டைனிங் டேபிள் போடவேண்டியதாக இருந்தால் மேற்கு அல்லது தெற்கு திசைகள் பொருத்தமாக இருக்கும்.