வெறும் கற்கள், கைகள், கம்பிகள்..! சீனர்கள் 43 பேரை இந்திய வீரர்கள் பரலோகம் அனுப்பியது எப்படி? சிலிர்க்க வைத்த தகவல்!

லடாக்கில் நடைபெற்ற மோதலில் வெறும் கற்கள், கைகள் மற்றும் கம்பிகளை பயன்படுத்தியே சீனர்கள் 43 பேரை இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைய வைத்திருப்பது தெரியவந்துள்ளது.


கடந்த 13ந் தேதி முதலே லடாக்கில் இந்திய - சீன வீரர்கள் இடையே மோதல் போக்கு நீடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15ந் தேதி இரவு படைகள் முகாம்களுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் எல்லைக்குள் வருவதாக கூறி சீன ராணுவம் பிரச்சனை செய்துள்ளது.

ஆனால் தாங்கள் இந்திய பகுதியில் தான் இருக்கிறோம் என்றும் இது காலம் காலமாக தாங்கள் ரோந்து செல்லும் பகுதி என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது. ஆனால் அதனை கேட்காமல் சீன ராணுவ வீரர்கள் பிரச்சனை செய்துள்ளனர். மேலும் சீன ராணுவர்கள் இந்திய ராணுவ வீரர்களை தகாத வார்த்தைகளில் பேசி தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் சற்றும் தாமதிக்காத இந்திய ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தினரை தாக்கத் தொடங்கியுள்ளனர். இரு தரப்புமே இந்த தாக்குதலின் போது துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. மாறாக கைகளுக்கு கிடைத்த கற்கள், கம்பிகள் மற்றும தங்கள் கைகளை வைத்தே தாக்கிக் கொண்டனர்.

இந்த தாக்குதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். கைகள், கற்களை வைத்து தாக்கிக் கொண்டார் இத்தனை பேர் சாக முடியுமா என கேள்வி எழுந்தது. ஆனால் லடாக் பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் உள்ள பகுதியாகும். மிகவும் குளிர்ச்சியான அங்கு லேசான காயம் என்றாலும் கூட அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

இல்லை என்றால் லடாக்கில் உள்ள கால நிலைக்கு உயிர் பிழைக்க முடியாது. அந்த வகையில் தான் காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்துள்ளனர்.