காருக்குள் 96 பீர் பாட்டில்..! 8 பாட்டில் ரம்..! தங்கையுடன் போலீசில் சிக்கிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..! பரபர பின்னணி!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது காரில் 96 பீர் பாட்டில்கள், 8 பாட்டில்கள் ரம்முடன் சிக்கிய விவகாரம் தான் தற்போது தமிழ் திரையுலகின் பரபர மேட்டர்.


கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் கடத்தி வருபவர்களை கண்டுபிடிக்க இங்கு சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டும் இல்லாமல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து மதுபானங்கள் சென்னைக்கு கடத்தி வரப்படுகின்றன.

இந்த நிலையில் வியாழக்கிழமை அங்கு போலீசார் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த TN 07 CQ 0099 என்ற பதிவெண் கொண்ட இன்னோவா  காரை போலீசார் மறித்தனர். அப்போது காருக்குள் நடிகை ரம்யாகிருஷ்ணன் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விவரத்தை கோரி காரை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காருக்குள் போலீசார் சோதனை செய்த போது ரம்யாகிருஷ்ணனுடன் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் இருந்தார். மேலும் காரின் டிக்கி பகுதியில் 96 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபான பாட்டில்கள் இருந்தன. இதனை அடுத்து இப்படி மொத்தமாக மதுபானங்களை காரில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்று போலீசார் கூறியுள்ளனர்.

பிறகு தங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று ரம்யாகிருஷ்ணன் கூறிய நிலையில் காரின் டிரைவர் அதனை தான் வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து ரம்யாகிருஷணனின் கார் ஓட்டுனர் செல்வகுமார் கைது செய்யப்பட்டார். மதுபானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 

பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது டிரைவரை ஜாமீனில் எடுத்துச் சென்றார். இதனிடையே ரம்யா கிருஷ்ணன் காரில் மதுபானங்கள் இருந்து திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.