கைகளை நம்பி கொடுத்த பச்சிளம் குழந்தை..! அப்படியே கொதிக்கும் வெந்நீரில் அமுக்கிய வேலைக்காரி..! கேட்போர் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

வேலைக்கார பெண் கொதிக்கும் நீரில் எஜமானரின் குழந்தையை தவிக்க விட்டு சம்பவமானது சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மியான்மர் நாட்டைச் சேர்ந்த 30 வயது நிரம்பிய பெண் ஒருவர் சிங்கப்பூரில் வசித்து வந்தார். வறுமையின் காரணமாக 40 வயது நிரம்பிய ஏமி லோ என்ற பெண்ணின் வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார். ஏமி லோவுக்கு 16 மாத குழந்தை ஒன்றுள்ளது. இந்த குழந்தையையும் சேர்த்து கவனித்துக் கொள்வதற்காக மியான்மர் நாட்டு பெண் வீட்டில் பணியமர்த்தப்பட்டார். கணவன் மனைவி இருவரும் பணிப்பெண்ணிடம் குழந்தையை ஒப்படைத்து தினமும் வேலைக்கு சென்று வந்தனர். 

திடீரென்று ஒருநாள் குழந்தையின் கையில் பயங்கரமான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனடியாக  பெற்றோர், பணிபெண்ணுடன் குழந்தையை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர் பெற்றோர். தீக்காயங்களுக்கு சிகிச்சையளித்த பின்னர் மருத்துவர்கள், தீ காயங்கள் எதார்த்தமாக ஏற்பட்டது போன்று தோன்றவில்லை என்று கூறியுள்ளனர். சந்தேகித்த பெற்றோர் உடனடியாக வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்தப் பணிப்பெண் கொதிக்கும் நீரில் குழந்தையின் கைகளை அழுத்துவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்‌. ஒரு முறைக்கு மேலே தொடர்ந்து குழந்தையின் கையை வெண்ணீரில் பணிப்பெண் வைத்து அழுத்துவதை பெற்றோர் நன்றாக கவனித்தனர். அவரிடம் விசாரித்தபோது, அதை யதார்த்தமாக செய்ததாக கூறியுள்ளார்.

உடனடியாக பெற்றோர் சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சிங்கப்பூர் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.