தனியாக வசித்து வந்த இளம்பெண்ணை வீட்டு உரிமையாளர் அடித்து கொலை செய்த சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடகை வீட்டில் தனிமையில் வசித்த விதவைப் பெண்ணுக்கு ஹவுஸ் ஓனர்களால் நேர்ந்த கொடூரம்! அதிர வைக்கும் சம்பவம்!
டெல்லியில் மஞ்சு கோயல் என்பவர் வசித்துவருகிறார். இவர் பல வருடங்களுக்கு முன்னால் தன் கணவனை பறிகொடுத்தவராவார். அங்குள்ள வாடகை வீட்டொன்றில் கடந்த 6 மாத காலமாக வசித்து வந்தார்.
இவருடைய வீட்டு உரிமையாளரின் பெயர் சதீஷ். திடீரென்று சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் இருந்து மஞ்சு 3 லட்சம் ரூபாயை திருடியதாக குற்றம் சாட்டினார். இதனை மஞ்சு கடுமையாக மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே பலத்த சண்டை ஏற்பட்டது.
சண்டையின்போது சதீஷும், அவருடைய மகனும் மஞ்சுவை கடுமையாக தாக்கினர். என்னரும் மஞ்சுவின் சகோதரரான முகேஷுக்கு கால் செய்து, "எங்கள் வீட்டிலிருந்து 3 லட்சம் ரூபாய் திருடியதால் உன் சகோதரியை அடித்து உதைத்தோம்" என்று சதீஷ் கூறியுள்ளார்.
பதறிப்போன முகேஷ் மஞ்சுவின் வீட்டிற்கு சென்று அவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் மருத்துவர்கள் முகேஷின் வீட்டுக்கு விரைந்து வந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக மஞ்சு இறந்துவிட்டார்.
உடனடியாக முகேஷ் காவல் நிலையத்தில் தன் சகோதரி அடித்து கொலை செய்ததற்காக சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் தன் தங்கையிடம் இருந்த 60,000 ரூபாயையும் சதீஷின் குடும்பத்தினர் பறிமுதல் செய்ததாக முகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ் மற்றும் அவருடைய மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.