எரிந்த காரில் எலும்புக் கூடாக மீட்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் மகன்! கரகாட்டக்காரியை பார்க்கச் சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்!

எரிந்து போன காரிலிருந்து இளைஞர் ஒருவர் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் வேடச்சந்தூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே கோவிலூர் என்னும் பகுதியில் புகழ்பெற்ற ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. அந்த ஹோட்டலின் உரிமையாளரின் பெயர் மகாமுனி. இவருடைய மகனின் பெயர் சிவா. இவர் தோப்புப்பட்டி பகுதியில் நேற்றிரவு கரகாட்ட நிகழ்ச்சியை காண்பதற்கு தனியாக காரில் சென்றார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதற்கிடையே வேலாயுதம்பாளையம் கணவாய் என்னும் பகுதியின் சாலையோரத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாகவும் அப்போது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் காரை இளைஞர் ஒருவர் எரிந்த  நிலையில் எலும்புக்கூடாக கிடப்பதாக காவல்துறையினர் கண்டறிந்தனர்.

பின்னர் விசாரணை மேற்கொண்டதில் எரிந்த காராணது ஹோட்டல் உரிமையாளர் மகாமுனியின் மகன் சிவாவுடையது என்பதும், எலும்புக்கூடாக கிடந்தது சிவா தான் என்பதையும் கண்டறிந்தனர். பின்னர் மகாமுனிக்கு தகவல் கூறி அனுப்பினர். 

சாலை வழியாக செல்லவேண்டிய சிவா, ஏன் அந்த பகுதிக்கு சென்றார் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வேடசந்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.