ஹோட்டல் ரூமில் தனியாக மது அருந்திக் கொண்டிருந்த இளம் பெண்! உள்ளே சென்ற ஆண் ஊழியருக்கு காத்திருந்த பகீர் அனுபவம்!

பிரபல ஹோட்டலில் இளம்பெண்ணிடம் ஊழியர் தவறாக நடக்க முயன்ற சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்றிரவு இங்கு பெண்ணொருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அறைக்கு சென்றவுடன் அந்த பெண் ஹோட்டலின் வரவேற்பறைக்கு கால் செய்து, அறையை சுத்தம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

அதன்படி ஹோட்டல் ஊழியர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் மது அருந்திக்கொண்டிருந்தார். அந்த அறையின் ஜன்னல் கதவை மூடுமாறு அவர் அந்த ஊழியரிடம் கூறியுள்ளார். ஜன்னலை மூடிய ஊழியர், அறையின் கதவையும் மூடியுள்ளார். பின்னர், அந்த இளம்பெண்ணிடம் ஹோட்டல் ஊழியர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். 

அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டதால், ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து அந்த அறைக்கு வந்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்ததை அவர்களிடம் எடுத்துரைத்துள்ளார். உடனடியாக அவர்கள் அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர் அந்தப் பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று உயரதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை விடுவித்து விடுமாறு அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது அந்த நட்சத்திர ஓட்டலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.