கனடா நாட்டின் பீல் மாகாணத்திற்கு இலங்கையை சேர்ந்தவர் தலைமை காவல்துறை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கனடா நாட்டின் ஒரு மாநிலத்திற்கே காவல்துறை தலைமை அதிகாரியான தமிழன்! பெருமை கொள்ள வைத்த துரையப்பா!

1975-ஆம் ஆண்டில் இலங்கை நாட்டில் ஆல்பர்ட் துரையப்பா என்பவர் மேயராக பணியாற்றினார். அவர் சுட்டு கொல்லப்பட்டார். இதன் பின்னர் அவருடைய குடும்பத்தினர் கனடா நாட்டிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அப்போது அவருடைய பேரனான நிஷான் துறையப்பாவுக்கு 3 வயதேயானது
கனடா நாட்டிலேயே படிப்பை பயின்று நிஷான் துரையப்பா, கடந்த 25 ஆண்டுகளாக குற்றப்பிரிவு அதிகாரியாக, போதை தடுப்பு அதிகாரியாக முதலிய பல்வேறு காவல் துறை பிரிவுகளில் பணியாற்றி வந்தார். ஹால்டன் பிராந்தியத்தின் கூடுதல் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் பீல் நகரத்தின் முதன்மை காவல்துறை அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவில் நிஷான் துரையப்பா கூறுகையில், "பொதுமக்கள் எந்தளவில் காவல்துறையினரிடமிருந்து நம்பிக்கை எதிர்பார்க்கின்றனரோ, அதே அளவிற்கு காவல்துறையினரும் அவர்களிடமிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனர்.
3000 காவல்துறை அதிகாரிகளை கொண்ட பீல் நகரத்தின் தலைமை அதிகாரியாக பதிவியேற்றுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக நியாயமாக கடமையாற்றுவேன்" என்று கூறினார்.
இந்த விழாவானது அந்நகரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.