ஹாஸ்பிடலுக்கு சிகிச்சைக்கு சென்ற இளம் பெண் உடலை பயன்படுத்தி டாக்டர்கள் செய்த விபரீத செயல்! அதிர்ச்சி சம்பவம்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை ஆராய்ச்சிக்காக மருத்துவர்கள் பயன்படுத்தியுள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்காவில் ஸ்கீடர் மகா என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் "ட்வீச் ஸ்டரிமர்" என்ற வீடியோக்களை நேரடியாக ஒளிபரப்பி வருவதில் ஈடுபட்டு வருகிறார்.

இவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. மிகவும் சிரமப்பட்டு வந்ததால் அவர் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவருக்கு "கிரானிக் மைலோஜீனஸ் லுக்கேமியா" என்ற நோய் இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் அதற்கான சிகிச்சையை அதே மருத்துவமனையில் எடுத்துக்கொண்டு வந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் இவரை தங்களுடைய ஆய்வு பயன்படுத்த முயற்சித்தனர். முதலில் அவரிடம் ஒப்புதலை பெற முயன்ற போது, ஸ்கீடர் மறுத்துவிட்டார்.

அதன் பின்னர், அவரை ஏமாற்றும் மருத்துவர்கள் கையெழுத்து வாங்கினர். அவர் ஒருநாள் தனிமையிலிருந்த போது இதுபோன்ற ஆவனங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரை உபயோகப்படுத்தி மருத்துவரால் தங்களுடைய ஆய்வுகளில் ஈடுபட முயற்சித்ததை கண்டறிந்தார்.

இதுதொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை 85,000 பேர் பார்த்துள்ளனர். அதில் குறிப்பிட்ட மருத்துவமனையை குறித்து மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.