அடுத்தடுத்து 7 சடலங்கள்..! அவைகளுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை..! மருத்துவமனையின் பதற வைக்கும் செயல்! எங்கு தெரியுமா?

கொரோனாவால் இறந்தவர்களுக்கு அருகில் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்க்கப்படும் சம்பவமானது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று வரை 16,758 பேர் இந்த கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3,094 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 651 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மராட்டிய மாநிலத்தில் மார்ச் 25-ஆம் தேதி முதல் இன்றுவரை ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. 

அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மும்பை மாநகரிலே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மும்பை மாநகரில் மட்டும் 10,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநகரில் உள்ள மருத்துவ வசதிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவாகி வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள சியோன் மருத்துவமனையில் இறந்தவர்களுக்கு அருகிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

அதாவது 7 இறந்தவர்களின் உடல்கள் கருப்புப்பையில் அடைக்கப்பட்டு தரையில் இருக்கும் நேரத்தில் அதற்கு அருகிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இதுகுறித்து அந்த மருத்துவ உயரதிகாரி கூறுகையில், "இந்த நோயால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் அவர்களுடைய உடல்களை வாங்குவதற்காக அச்சப்படுவது இந்த சூழல் ஏற்படுகிறது. இருப்பினும் இது தவறானது. இதற்கான விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலை இனி மற்றொருமுறை ஏற்படாது" என்று கூறியுள்ளார்.

மருத்துவ பணியாளர்கள் கூறுகையில், "எங்கள் மருத்துவமனையில் 15 பிணங்களை வைப்பதற்கு மட்டுமே இடம் உள்ளன. ஏற்கனவே 11 பிணங்கள் வைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த சூழல் ஏற்படுகிறது. மேலும் உறவினர்கள் பிணங்களை வாங்கி செல்லும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்" என்றும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படமானது நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.