குழந்தைகள் மருத்துவமமனையில் பயங்கர தீ..! இன்குபேட்டரில் இருந்த 6 குழந்தைகள் சிக்கிய பரிதாபம்! பதற வைக்கும் சம்பவம்!

குழந்தை மருத்துவமனை தீ பிடித்து எரிந்ததில் 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவமானது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத். இப்பகுதிக்கு உட்பட்ட எல்.பி நகரில் சைன் குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் 3-வது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது. 3-வது மாடியில் இன்குபேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இன்குபேட்டர்களில் 6 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராவிதமாக,  மருத்துவமனையில்  நேற்றதிகாலை 3 மணியளவில் தீ பிடித்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 5 மாத குழந்தை ஒன்று இறந்து போயுள்ளது.

மேலும் 5 பச்சிளம் குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. இன்குபேட்டர்களிலிருந்து மின் கசிந்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.