வலுவான உடல் அடைய தேன் குடிங்க - மாரடைப்பு வராமல் தடுப்பது எது தெரியுமா? இஞ்சி

உள்ளுக்கு சாப்பிட்டாலும் வெளிப்பூச்சாக பயன்படுத்தினாலும் மிகுந்த ஆற்றலுடன் செயல்படுவதில் தேனுக்கு முக்கிய இடம் உண்டு.

 தினமும் 10 மில்லி தேன் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலுக்கு வலு உண்டாகும்.

·         தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்துவந்தால் வாய்ப்புண் நீங்கும். நாக்கு ருசி மொட்டுகள் சீரடையும்.

·         அடிபட்ட இடம், தீப்பட்ட இடங்களில் முதல் உதவியாக தேனை தடவுவது நல்லது. அதன்பிறகு மருத்துவம் செய்துகொள்ளலாம்.

·         சுடுநீரில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா, சளி, மூச்சிரைப்பு குணமாவதுடன் இரவில் நிம்மதியான உறக்கம் கிட்டும்.


மாரடைப்பு வராமல் தடுப்பது எது தெரியுமா? இஞ்சி

 இஞ்சிக்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பார்கள். ஆம், உடல் ஆரோக்கியம் காக்கும் அற்புத சக்திகள் இஞ்சியில் மறைந்துள்ளன.

·         தலைவலி, உடல் வலி, சோர்வு இருக்கும்போது இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து சுடுநீரில் கலந்து கொடுத்தால் மொத்தமும் சரியாகிவிடும்.

·         துயரம், கவலை, மன அழுத்தம் ஏற்படும்போது இஞ்சியை டீயாக்கி குடிப்பது மிகுந்த பயன் தருகிறது.

·         ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு என்பதால் மாரடைப்பு வராமல் காப்பாற்றுகிறது.

·         பெண்களின் மாதவிலக்கு குறைபாட்டை நீக்குவதுடன் கருப்பை குறைபாட்டையும் களைகிறது இஞ்சி.

More Recent News