பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல்! அபார வெற்றி! உற்சாகத்தில் அமித் ஷா!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியை உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ஜிகல் தாக்குதலனுடன் ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.


மழையால் பாதிக்கப்பட்ட உலக கோப்பை லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அணி பெற்ற வெற்றியை பாராட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் செய்துள்ளார். அதில் பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அதன் முடிவு எப்போதும் போல வெற்றி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கும் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை வீழ்த்தி கிடைத்த வெற்றி மூலம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்ந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் அனைவரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என்றும் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். அமித் ஷாவின் இந்த ட்வீட் தற்போது வைரல் ஆகி வருகிறது.