இரவு முதலில் கடவுளுக்கு பூஜை..! பிறகு தான் கட்டிலில் பூஜை..! தொலைக்காட்சி நேரலையில் வெளியான ஷாக் தகவல்!

அமெரிக்க மாடல் ஆஷ்லே கிரஹாம் அனுதினமும் இறை வழிபாடு முடித்து விட்டு பின்னர் தன் கணவருடன் உல்லாசமாக இருப்பார் என கூறியிருக்கிறார்.


பிரபல அமெரிக்க மாடல் ஆஷ்லே கிரஹாம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். "எ லிட்டில் லேட் வித் லில்லி சிங்" என்ற இந்த நிகழ்ச்சியில் ஆஷ்லே கிரஹாம் பங்கேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியை கனடா நாட்டு பிரபல யூடியூப் காமெடியன் லில்லி சிங் என்பவர் தொகுத்து வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆஷ்லே தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் தன் கணவருடன் இருக்கும் உறவை பற்றியும் மிகவும் சகஜமாகப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அனுதினமும் இரவு வழிபாட்டை முடித்து விட்டு தன் கணவருடன் உல்லாசமாக இருப்பேன் என கூறியிருக்கிறார்.

இதனால் உடலுக்கும் மனதுக்கும் மிகப்பெரிய புத்துணர்ச்சி கிடைக்கும் எனவும் ஆஷ்லே அந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதனைக்கேட்ட தொகுப்பாளர்கள் லில்லி சிங் சிரிப்பை அடக்க முடியாமல் சிக்கி தவித்தார். நேரலையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று அறிந்தும் தன்னால் சிரிப்பை கட்டுப்படுத்த இயலவில்லை என்று லில்லி சிங் கூறியிருந்தார்.

மேலும் தனக்கும் இதுபோன்ற பிரேயர் நைட்ஸ் இருந்தால் நல்லா இருக்கும் என்றும் லில்லி சிங் கூறியிருந்தார். தற்போது லில்லி சிங் மற்றும் ஆஷ்லே கிரஹாம் பேசிய இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.