35 வயது நடிகைக்கு குழந்தை கொடுத்த 69 வயது நடிகர்! கேட்போரை அசர வைத்த அட்டகாசம்!

ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கியர், தனது 69 வயதில் ஒரு குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார்.


ரிச்சர்ட் கியரைஉங்களுக்கு மறந்திருக்கலாம். ஐ.நா. சபை சார்பில், உலகம் முழுவதும் எயிட்ஸ் நோய் உள்ளிட்ட பால்வினை நோய்களுக்கு எதிராக, தொண்டுப் பணிகள் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியா வந்தபோது, பொது மேடையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்து, சர்ச்சையை கிளப்பினார். 

இவருக்கு தற்போது 69 வயதாகிறது. இவரது முன்னாள் மனைவி கேரி லோவல். இவர்களுக்கு, 19 வயது மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, கியரிடம் இருந்து பிரிந்துவிட்டார்.

பின்னர் ரிச்சர்ட் கியர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 35 வயதான சமூக ஆர்வலர் மற்றும் நடிகையான அலெஜான்டரா சில்வா உடன் திருமணம் செய்து, குடும்பம் நடத்தி வருகிறார். ஆனாலும், பல ஆண்டுகளாக, இவர்களுக்கு, இதுவரை குழந்தை ஏதும் இல்லை. 

இந்நிலையில், இவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலமாக, 69 வயதில் குழந்தைக்கு அப்பாவாகி, ரிச்சர்ட் சாதனை படைத்துள்ளார். இந்த புகைப்படத்தை, அலெஜான்டரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு தற்போது நடந்துள்ளது.

எனினும், தலாய் லாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கும் முன்பாக, இத்தகவலை வெளியிட விரும்பவில்லை,'' என்று அலெஜான்டரா கூறியுள்ளார். இவர்கள் 2 பேரும், அந்த புகைப்படத்தில், தலாய் லாமாவிடம் ஆசிர்வாதம் வாங்குவதைப் போல உள்ளது. 

சில நாட்கள் முன்பாக, கதைத் திருட்டு தொடர்பான புகாரில் ரிச்சர்ட் கியர் சிக்கி, பின்னர் மீண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. 69 வயதில் நடிகர் தந்தையானது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.