தி.மு.க. கூட்டணியில் ஓட்டை..? ராசியில்லாத வைகோவை வெளியேற்றும் கிச்சன் கேபினட்.

தினமும் தி.மு.க. சார்பில் வெளிவரும் அறிக்கைகளில் எல்லாம், எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்று அழுத்தி அழுத்தி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், பழையவர்களை வெளியேற்றிவிட்டு புதியவர்களை கொண்டுவரப் போகிறார்கள் என்பதுதான்.


இப்போது எப்படியாவது பா.ம.க. கமல்ஹாசனின் மய்யம் மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகியவற்றை உள்ளே கொண்டுவந்தே தீரவேண்டும் என்று தீவிரமாக செயலாற்றிவருகிறது தி.மு.க.

இதற்காக இத்தனை காலமும் தங்கள் வசமிருக்கும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் மற்றும் ம.தி.மு.க.வை வெளியேற்ற இருக்கிறார்கள். இதில் மற்ற கட்சிகளை வெளியேற்றுவதற்கு என்ன காரணம் இருக்கிறதோ இல்லையோ, ம.தி.மு.க.வை ராசி காரணமாக வெளீயேற்றியே தீரவேண்டும் என்பதில் தி.மு.க.வின் கிச்சன் கேபினட் உறுதியாக இருக்கிறதாம்.

வைகோவின் ராசி எல்லோரும் அறிந்ததுதான். அவர் இருக்கும் எந்த கூட்டணியும் ஜெயித்ததே இல்லை. ஆகவே, சட்டமன்றத்தில் அவரை மடியில் கட்டிக்கொண்டு தேர்தல் வேலையைத் தொடங்கவேண்டாம் என்று கிச்சன் கேபினட் முடிவெடுத்துவிட்டதாம்.

இதை எப்படி சொல்வது என்று தெரியாமல்தான், தினம் ஒரு அறிக்கை விட்டு குழப்பிக்கொண்டு இருக்கிறார்களாம். பாவம்தான் வைகோ.