வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று கூறுவதைவிட வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று கெத்தாக கூறலாம்.
மெட்ராஸ் தினம் தோன்றிய வரலாறு! மெட்ராஸ் டே ஸ்பெஷல்!

மெட்ராஸ் கி.பி. 1639 ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இது மெட்ராஸின் 380 ஆவது பிறந்த நாளாகும்.
மெட்ராஸ் தினம் என்றால் என்ன?
கிழக்கு இந்திய கம்பெனி வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்த மெட்ராஸ் தினம் கடந்த 2004 ஆம் ஆண்டில் முதல் தான் கொண்டாடப்பட்டு வருகிறது . இதனை அரசு அறிவிக்கப்பட்டு கொண்டாடவில்லை மாறாக இதனை மூன்று பேர் தங்களுடைய வீட்டில் இருந்து ஜாலியாக காபி குடிக்கும் போது எழுந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
யார் அந்த மும்மூர்த்திகள் ? ஏன் இவர்கள் இதனை கொண்டாட ஆரம்பித்தனர் ?
ஆசிரியர் முத்தையா, பத்திரிகையாளர்கள் ஸசி நாயர், வின்ஸண்ட் டி சவுஸ் ஆகிய மூவர்தான் மெட்ராஸ் தின கொண்டாட்டத்திற்கு காரணமானவர்கள்.
நாளடைவில் மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாறி தற்போது சென்னை தினம் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.