இந்திய நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவது எப்படி ?

இந்திய சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.


நம்முடைய திருநாட்டில் 73 வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட உள்ளோம் .

நம்முடைய இந்திய திருநாடு கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது. ஆகவே இந்த நாள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அதற்கு தக்க மரியாதை செலுத்தப்படும். 

ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் பாரத  பிரதமர் தேசிய கொடி ஏற்றி அதற்கு உரிய மரியாதை செய்வார். அதற்குப்பின் சுதந்திர தினத்தைப் பற்றிய உரையாடலை பிரதமர் நிகழ்த்துவார்.

இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில முதல்வர்  தேசிய கொடியை ஏற்றி அதற்கு மரியாதை செய்வார் அதற்குப்பின் நம்முடைய சுதந்திர போராட்ட தியாகிகளை    நினைவு கூர்ந்து  உரையாடலை  நிகழ்த்துவார்.

இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர் , முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.

இதற்குப்பின் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் நிகழ்ச்சியினை  நிறைவு செய்வர்.