சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து உருவான கடவுள் யார் தெரியுமா?

வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.


சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சன் சிவனை மதிக்காமல் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமல் யாகத்தை நிகழ்த்தினான்.

நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் ( பார்வதி) மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவம் ஆடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தட்சனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறுகிறது.

அகந்தையை அழித்து நீதியை நிலைநாட்டிட, ஈசுவரனின் அம்சமாகத் தோற்றுவிக்கப்பட்டவரே வீரபத்திரர். தவறு செய்தவனுக்குத் தண்டனை தந்து நீதியைக் காக்கும் நீதி தேவனாக அவதரித்தவரே வீரபத்திரர். ஆணவமே மனிதனை அழிக்கும். இறைவனின் அருளைப் பெற விழைய வேண்டுமே அல்லாது, அவனையே எதிர்த்து அழித்திடலாகாது என்ற அரிய தத்துவத்தை உலகோர்க்குப் புகட்டிட எழுந்த கோலமே வீரபத்திரர்.

வீரபத்திரருக்குவீரம்என்பதற்குஅழகுஎன்றும், “பத்திரம்என்பதற்குகாப்பவன்என்றும் பொருள் கொண்டுவீரம் காக்கும் கடவுள்என்கின்றனர்.

வீரபத்திரரை குலதெய்வ மாக கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'வீ'' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களையே சூட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, சென்னையிலுள்ள மயிலாப்பூர், தாராசுரம், கும்பகோணம், திருக்கடவூர் போன்ற இடங்களிலும், இலங்கை யாழ்ப்பாணத்தில் கோப்பாய், கல்வியங்காடு, வியாபாரிமூலை, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.

வீரபத்திரரை நினைத்து கும்பிட்டு வழங்கப்படும் திருநீறுக்கு பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்ற வற்றை விரட்டும் ஆற்றல் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.