நவராத்திரி தோன்றிய வரலாறு!

மகிஷாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்ம தேவனிடம் சாகாவரம் வேண்டும் என்று கேட்டான் .


அதற்கு பிரம்ம தேவனோ உலகில் பிறந்தவர்கள் என்றாவது ஒருநாள் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் . ஆகையால் சாகாவரம் கொடுக்க இயலாது என்று மகிஷாசுரன் இடம் கூறினார் .

இதனால் மகிஷாசுரன் பிரம்ம தேவனிடம் எனக்கு ஒரு பெண்ணால்தான் மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டான் . பொதுவாக பெண்கள் வலிமையில் ஆண்களை விட குறைவாக உள்ளதால் , ஒரு பெண்ணால் தன்னை கொல்ல இயலாது என்ற எண்ணத்தில் மகிஷாசுரன் இந்த வரத்தை பிரம்மனிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டான் .

மகிஷாசுரன் கிடைத்த வரத்தை தவறாக பயன்படுத்தி மக்களை துன்புறுத்தி கொண்டிருந்தான். இதனால் மகிஷாசுரனை அழிக்க அம்பிகை ஒன்பது நாள் கடும்தவம் இருந்து, மகிஷாசுரமர்த்தினி ஆக மாறி மகிஷாசுரனை வதம் செய்தார் . இந்நிகழ்வு  புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள்,வரும்  பிரதமை திதி முதல் அடுத்து வரும் ஒன்பது நாட்களுக்கு நடைபெற்றது. அதனையே நாம் நவராத்திரி ஆக கொண்டாடி வருகிறோம்.