ரக்ஷாபந்தன் உருவாக காரணமான கிருஷ்ணன்-பாஞ்சாலி வரலாற்றுக் கதை தெரியுமா உங்களுக்கு?

ரக்ஷா பந்தன் என்பது தமக்கு அறிமுகம் ஆனவர்கள் மட்டும் இல்லாமல் அறிமுகம் ஆகாமல் இருக்கும் காவலர்கள் ,ராணுவ வீரர்கள் என முகம் தெரியாத பல சகோதரர்களுக்கு ராக்கி கயிறை கட்டி அவர்களை தங்களுடைய சகோதரர்கள் ஆக பாவிக்கும் தன்மையை உருவாக்க கூடிய ஒரு நாளாக அமைந்துள்ளது.


இந்த நாளில் ஒரு பெண் ஒரு ஆணின் கையில் கட்டும் கயிற்றை வைத்து அந்த ஆண் அந்த பெண்ணுக்கு தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நல்ல காவலனாகவும் ஒரு நல்ல சகோதரனாகவும் ஒரு நல்ல நண்பனாகவும் இருப்பேன் என உறுதி அளிக்கிறார். அதேபோல் அந்தப் பெண்ணும் அந்த ஆணின்  வளர்ச்சிக்காகவும் அவனுடைய உடல் நலத்திற்காகவும் அவனுக்கு எல்லா சந்தோஷங்களும் அவன் வாழ்வில் பெறுவதற்காகவும் அந்த கடவுளை மனதார வேண்டிக் கொள்வதாகவும் உறுதி கூறுகிறாள்.

இந்த ரக்ஷாபந்தன் விழாவானது  நம்முடைய இந்து புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என பலரால் கூறப்பட்டு வருகிறது.

இதற்கு சான்றாக மகாபாரதத்தில் கண்ணன் பாஞ்சாலி மீது வைத்திருந்த பாசத்தை கூறலாம். 

கண்ணன் ஒரு நாள் போரில் பங்கேற்று கைகளில் அடிப்பட்டு வீடு திரும்பினார் . அப்போது அதனை பார்த்த பாஞ்சாலி மிகவும் துடி துடித்து போனால் என்ன செய்வது என்று அறியாது அவள் திடீரென்று தன்னுடைய புடவையை கிழித்து  கண்ணன் கைகளில் வழிந்த ரத்தத்தை நிறுத்துவதற்காக  கட்டினாள் .

இதனை பார்த்த கண்ணன் பாஞ்சாலிக்கு தன் மீது கொண்ட பாசத்தை எண்ணி மிகவும் நெகிழ்ந்து போனான். இதனையடுத்து  எப்போதுமே தான் பாஞ்சாலியின் நல்வாழ்வைக் காக்க  உருதுணை இருப்பேன் என்று உறுதி கூறினார்.

அதனால் தான் சூதாட்டத்தின் போது பாண்டவர்களை ஒருமுறை கூட காப்பாற்ற வராத கண்ணன் பாஞ்சாலியை மட்டும் காப்பாற்றுவதற்காக ஓடோடி வந்தார் .

இதனை மையமாக வைத்து தான்  போர்க்காலங்களில் பெண்கள் தங்களுடைய  சகோதரர்களுக்கு மஞ்சள் நிற  கயிற்றினைக் கட்டி அனுப்பி வைத்த செயல்கள் நமது வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.