தஞ்சை பெரிய கோவிலுக்குள் காதலர்களின் சல்லாபம்..! வீடியோ வெளியானதால் எழுந்த முதல் கோரிக்கை!

சில காதல் ஜோடிகள் தஞ்சை பெரிய கோவிலில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதால் கோவிலுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்க்கும் கூட்டத்தில் இன்று இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் குருமூர்த்தி அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையடுத்து கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும் பக்தர்களை முகம் சுளிக்கும் வகையிலும் சில காதல் ஜோடிகள் நடந்து வருகிறார்கள். இதனை அங்குள்ள காவலர்கள் இதை தடுக்கவில்லை. ஆகையால் கோவிலின் புனிதத்தை காக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற தவறாக நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும் இதுபற்றி பேசிய இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தி அவர்கள், அடுத்த மாதம் நடைபெற உள்ள கும்பாபிஷேகம் நடைபெற உள்ள காரணத்தினால் ராஜகோபுர கலசங்கள் சுத்தப்படுத்த படுவதற்காக அவைகளை கீழே இறக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தொல்லியல்துறை அதிகாரிகள் மற்றும் குழுவினர் மேலே ஏரி சென்று கலசங்களை ஆய்வு செய்தனர்.

அந்த நேரத்தில் சிலர் அந்த துறையில் இல்லாதவர்களும் மேலே ஏறி சென்றே தஞ்சை பெரிய கோவிலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அதை பரப்பி வருகின்றனர். இது விதிகளுக்குப் புறம்பான செயல். இதே போல சில மாதங்களுக்கு முன்பு ஆளில்லா கேமராக்களை பயன்படுத்தி தஞ்சை பெரிய கோவிலை வீடியோ எடுத்தனர். ஆகையால் இது போன்ற செயல்களை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் சமூக வலைத்தளத்தில் உள்ள வீடியோக்களை நீக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.