பைபாஸ் சாலை..! வேகமாக வந்த லாரி..! திடீரென ஓடிச் சென்று டயருக்கு அடியில் படுத்த நபர்! பதற வைத்த சிசிடிவி!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ‌ நபர் ஒருவர் வேகமாக வந்த லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழனி ஒட்டன்சத்திரம் சாலையில் அமைந்திருக்கும் சென்டர் மீடியத்தில் நபர் ஒருவர் வெகு நேரமாக நின்று கொண்டிருந்திருக்கிறார் . அப்பொழுது அந்த சாலை வழியே வேகமாக லாரி ஒன்று வந்துள்ளது. அதைப் பார்த்த அவர் தானாக முன்வந்து அந்த லாரியின் மீது போய் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். 

நபர் தான் ஓட்டிவரும் லாரி மீது வந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறார் என்பதை அறியாத ஓட்டுநரும் வேகமாக வந்து இருக்கிறார். இன்னிலையில் இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தங்களுடைய விசாரணையை துவங்கியுள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட நபர் யார் என்றும் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணங்களும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.