கொடி கட்டிப் பறக்கும் வாட்ஸ்ஆப் விபச்சாரம்! மெசேஜ் அனுப்பினால் வீடு தேடி வரும் பெண்கள்!

திருச்சியில் விபசார தொழில் கொடி கட்டி பறப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


திருச்சி ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருகாலத்தில் விபசார தொழில் ஆங்காங்கே நடைபெறுவது வழக்கம். பின்னர் திருச்சி கே.கே.நகர், பொன்மலை, உறையூர், காந்தி மார்க்கெட் போன்ற பங்களா வீடுகள் நிறைந்த இடங்களில், தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து, வெளிமாநில பெண்களை அழைத்து வந்து, விபசாரம் செய்ய தொடங்கினர்.

இதுபற்றி அவ்வப்போது, அண்டை வீடுகளில் வசிக்கும் மக்கள் தரும் புகாரின்படி, போலீசாரும் அந்த பங்களா வீடுகளில், சோதனை நடத்துவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இது கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், தற்போது, நவீன தொழில்நுட்ப வசதிகளை பின்பற்றி முழு நேர தொழிலாக, விபசாரத்தை பலர் மாற்றிவருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், இளைஞர்களை குறிவைத்து, வாட்ஸ்ஆப் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, விபசார கும்பல், வலைவீசுகின்றனர். இதில், சபலப்பட்டு சிக்குவோரை வைத்து, எளிதாக, வீடு தேடியே கஷ்டமரை அனுப்பி வைத்து, பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக, ஏழைப் பெண்களை குறிவைத்து, இந்த விபசார தொழில் செய்வோர், ஆசை வார்த்தை கூறி, வலைவீசுகின்றனர். போலீசாருக்கும் கட்டிங் தரப்படுவதால், அவர்கள் இதைக் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடர் புகார்கள் காரணமாக, திருச்சி கே.கே.நகர்ப் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் விபசாரம் நடத்திய கரூர் மாவட்டம் அரவக்குறியை சேர்ந்த ராஜேஷ், முசிறியை சேர்ந்த லோகநாதன், மண்ணச்சநல்லுர் சுரேஷ், திருச்சி கல்லுக்குழியை சேர்ந்த கோபால், உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களின் பிடியில் இருந்த 7 பெண்களையும் மீட்டுள்ளனர். இதுதவிர, ஏர்போர்ட் பகுதியில் விபசாரம் நடத்திய ரம்ஜான் பீவி, மலைக்கோட்டை பகுதியில் விபசாரம் செய்த லியாகத் அலிகான் உள்ளிட்டோரையும் கைது செய்துள்ளனர். இன்னும் சிலரை தேடிவருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.