வளைவில் அதிவேகம்! தலை குப்புற கவிழ்ந்த லாரி! ஓரமாக பைக்கில் சென்ற 2 பேர் தலை நசுங்கிய கோரம்! நாமக்கல் விபத்து!

வளைவில் அதிவேகத்தில் திரும்ப முயன்ற லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் 2 தொழிலாளர்கள் சிக்கி சம்பவ இடத்திலே தலை நசுங்கிய பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தினால் நாமக்கலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


நாமக்கல் அருகே அமைந்துள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரக்கு வயது 60. அவரது உறவினர் பெயர் கதிர்வேல் அவருக்கு 25 வயதுயாகிறது. இருவரும் நாமக்கலில் தச்சு தொழில் செய்கிறார்கள். இந்நிலையில், கொரோனாவினால் பல நாட்களுக்கு பிறகு இருவரும் நேற்று ஒரு மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லில் இருந்து போடிநாயக்கன்பட்டி நோக்கி வேலைக்கு சென்று கொண்டு இருந்தனர்.

சுப்பிரமணி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். கதிர்வேல் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார். இதற்கிடையில், நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியில் சென்றபோது, எதிரே பாலப்பட்டியில் இருந்து கூலிப்பட்டிக்கு செம்மண் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை பாலப்பட்டியை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் ஒட்டி வந்துள்ளார்.

வளைவில் வேகமாக திரும்ப முயன்ற லாரி, ஓட்டுநனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது விபத்திற்கு உள்ளானது. அப்போது, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த சுப்பிரமணி, கதிர்வேல் ஆகிய இருவரும் லாரிக்கு அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் காவல்துறையினர் விரைந்து வந்து. பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு பணியை மேற்கொண்டனர். பின்னர் சுப்பிரமணி, கதிர்வேல் ஆகியோரின் உடல்களை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தின் காரணமாக நேற்று நாமக்கல்-துறையூர் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.