கண் அயர்ந்த பேருந்து ஓட்டுனரால் சுக்கு நூறாகிய கார்! ஒரே குடும்பத்தின் 5 பேர் பலியான பரிதாபம்!

கார் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியில் வசித்து வருபவர் மாடசாமி. இவருடைய குடும்பத்தில் மொத்தம் 5 பேருள்ளனர். இவர்கள் நேற்றிரவு தூத்துக்குடியிலிருந்து அம்பாசமுத்திரம் சென்று கொண்டிருந்தனர். அப்போது பத்தமடை பகுதியில் பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அதிவிரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து பேருந்து விலகியது. மாடசாமியின் கார் பத்தமடை சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகத்தில் எதிரே வந்த பேருந்து அவர்கள் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மாடசாமி, நிக்கோலஸ், மித்ரன், பன்னீர் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தையறிந்த பத்தமடை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். இறந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக பத்தமடை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருள்மணி என்பவர் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பத்தமடை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.