உயர் வகுப்பினர் இட ஒதுக்கீட்டின் தில்லுமுல்லு வெளிவந்தாச்சு! ஸ்டேட் வங்கியில் அம்பலம்!

உயர் வகுப்பினருக்குக் கொடுக்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் யாருக்கும், எந்தப் பாதிப்பும் ஏற்படாது


உயர் வகுப்பினருக்குக் கொடுக்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் யாருக்கும், எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சொல்லப்பட்டு வருகிறது. அது, கட்டுச்சோற்றில் பூசணிக்காயை மறைக்கும் முயற்சி என்பது அம்பலமாகியுள்ளது. ஸ்டேட் வங்கியில் 8653 கிளர்க் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம்  நடைபெற்றது இந்த தேர்வு முடிவுகள் நேற்று மாலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 

இதில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. இதன்படி முதல் நிலைத் தேர்வு எழுதியவர்கள் அடுத்த கட்டமான மெயின் தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற கட் ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டது.

அதன்படி பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 28- மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர், எஸ்.சி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 61.25-ஆகவும் எஸ்.டி. பிரிவினருக்கு 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு எழுதியவர்களில் இருந்து ஒரு பணியிடத்துக்கு 10 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வு எழுதியவர்களில் குறைந்த எண்ணிக்கையிலே இருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் அனைவருமே எளிதில் மெயின் தேர்வுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மெயின் தேர்வு அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அம்முக தலைவர் டிடிவி தினகரன் போன்றோர், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். என்ன செய்யப்போகிறது அரசாங்கம்?