சொகுசு பேருந்தின் அசுர வேகம்! கோர விபத்து! 6 பேர் பலி! 30 பேர் காயம்!

அதிகாலையில் பயணம் செய்து கொண்டிருந்த சொகுசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவமானது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சட்டீஸ்கர் மாநிலத்தில் அம்பிகாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா என்ற இடத்திற்கு சொகுசு பேருந்து ஒன்று பயணம் செய்து கொண்டிருந்தது. 

இன்று அதிகாலை 3:30 மணியளவில் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்த போது அனுராஜ்காட்டி என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த கோர விபத்து குறித்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

பேருந்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்து பொதுமக்களை மீட்க தொடங்கினர். விபத்தில் 6 பேர் இறந்து போயினர். மேலும் 43 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர்களுள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது அனுராஜ்காட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.