டிவி நடிகையிடம் ஓவர் வழிசல்..! அம்பலமான பிரபல சினிமா நடிகரின் சபலம்! யார் தெரியுமா?

பிரபல சின்னத்திரை நடிகையிடம் கதாநாயகர் ஒருவர் ட்விட்டரில் வழிந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடத்தை பெற்றவர் நடிகை வாணி போஜன். சன் தொலைக்காட்சியில் வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் புகழ் பெற்ற இவர், தற்போது வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் கோலிவுட்டில் "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அசோக்செல்வன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "வானி போஜன் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள்" என்று டுவிட் செய்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சமூகவலைத்தளங்களில் ஒரு நடிகையிடம் இப்படியா வழிவது என்றும், போதையில் உள்ளீர்களா என்றும் ரசிகர்கள் அசோக்செல்வனை கிண்டல் செய்தனர்.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வாணி போஜன், "அசோக் செல்வன் மிகவும் திறமையான மற்றும் ஹாட் நடிகர்" என்று பதிலளித்திருந்தார். அத்துடன் சேர்த்து "ஓ மை கடவுளே" என்று டாக் செய்திருந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர்.

இந்த குழப்பத்தில் தீர்ப்பதற்காக அசோக் செல்வன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக கலர்ஸ் தொலைக்காட்சியில் கலந்து கொள்ள உள்ளோம். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அன்று நான் கொடுத்த டாஸ்க்கை செய்துள்ளோம் மேலும் நான் போதையில் இல்லை" என்று பதிலளித்துள்ளார்.

இதன் பின்னரே ரசிகர்கள் சற்று சமாதானம் அடைந்தனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.