இனிமே கட் அடிக்க முடியாது! வகுப்புக்கு வரவில்லை என்றால் வீட்டுக்கு செல்லும் எஸ்எம்எஸ்!

மாணவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு தெரிவிக்கும் வகையில் புதியதொரு திட்டம் ஜனவரி மாதத்திலிருந்து செயல்படப்போவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவை பதிவு செய்வதற்காக திட்டம் ஒன்றை செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

மேற்கூறப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் அனைத்தையும் ஐ.எம்.ஈ.எஸ் என்றழைக்கப்படும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த மொத்த பணியானது டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது. 

இந்தத் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 69 லட்சம் மாணவர்கள் செயல்படுவர் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர்களின் வருகைப்பதிவை அவர்களுடைய பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டம் கொண்டுவரப்போவதாக கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி இந்த தகவல் மையத்தில் பெற்றோரின் என்னையும் சேர்ப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலில் ஆசிரியர்கள் அது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரின் எண் தானா என்பது குறித்து உறுதி செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சரியாக செய்கின்றனவா என்பது குறித்து எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டமானது பெற்றோர்களால் ஒருமனதாக வரவேற்கத்தக்கது என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கூறியுள்ளார்.